பாபநாசம், செப்.9- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாண வர் கோகுல் தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் 3-ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவரை பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணியர சன், உடற் கல்வி ஆசிரியர் செல்வக் குமார், என்.சி.சி. அலு வலர் சரவணன், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சக மாணவர்கள் பாராட்டினர்.