கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட பெருமாங்குடி, பண்டாரவாடை பகுதிகளில் நோடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். கோபுராஜ புரம் ஊராட்சி தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவசாயி கள் சங்க மாவட்ட துணை தலைவர் காதர் உசேன், வி தொச மாநிலக்குழு எ. மாலதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.விஜயாள், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உமாபதி, இளங்கோவன், சதாசிவம், சீனிவாசன் கணேசன், விவசாய சங்க பொருளாளர் தங்கராசு உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டம் செய்தனர் அப்போது வட்டாட்சியர் சீமான் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட பெருங்குடி பண்டாரவடை பகுதியில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பது என ஏற்றுக் கொண்டு உத்தரவை யும் உடன் வழங்கப்பட்டது. இதனால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.