முசாபர்நகர்:
விவசாயிகளின் பத்து மாதகால போராட்டத்தின் ஒரு முக்கியபடிக்கல்லாக மேற்கு உத்தரபிர தேசத்தில் உள்ள முசாபர்நகரில் ‘மாபெரும் சங்கமம்’ (மகா பஞ்சாயத்து) தொடங்கியது. முன்னதாக லட்சக்கணக்கான விவசாயப் போராளிகளின் பங்கேற்புடன் பிரம்மாண்டமான பேரணி தொடங்கியது.
முசாபர்நகரில் உள்ள ஜிஐசி மைதானத்தில் காலை 11 மணிக்கு மகா பஞ்சாயத்து தொடங்கியது. ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ச்சியாக மழை பெய்தபோதிலும் மகா பஞ்சாயத்தில் பங்கேற்க வட மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்தனர். பேரணியில் முக்கியமாக ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். கிராமப்புறங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மையங்களுக்கு விவசாயிகள் இலவச உணவை விநியோகித்தனர்.
விவசாயிகள், பல்வேறு அமைப்பு களின் கொடிகளை ஏந்தியிருந்தனர். வண்ண வண்ண தொப்பிகளை அணிந்த பெண்கள் பேருந்துகள், கார்கள் மற்றும் டிராக்டர்களில் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.கர்நாடகாவைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கன்னட மொழியில் உரையாற்றினார். விவசாயிகளில் ஒருவர் ‘ரன்சிங்கா’ (டிரம்பெட்) வாசித்தார். அதன் புகைப்படத்தை கிசான் ஏக்தா மோர்ச்சா தனது டுவிட்டரில் உடனடியாக வெளியிட்டது.“முற்காலத்தில், போர், மரியாதை போன்ற நிகழ்வுகளில் தான் டிரெம்பெட்இசைக்கப்பட்டது. ஆனால் இன்றைக் கோ பாஜகவின் ‘கார்ப்பரேட் அரசியலுக்கு’-க்கு எதிராக அனைத்து விவசாயசங்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி டிரெம்பெட் வாசிக்கப் பட்டது.
ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி, “போராடும் விவசாயிகளுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு காரணங்களைக் கூறி முசார்பர் நகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.சாதி, மதம். சமூகம் கடந்தது. இது விவசாயிகள் போராட்டம். சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவும் தங்களுக்கு உள்ளது என தலைவர்கள் கூறினர். இது போன்ற கூட்டங்கள் (மகா பஞ்சாயத்து) நாடு முழுவதும் நடைபெறும். “நாட்டை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். நாடு காப்பாற்றப்பட வேண்டும். வணிகர்கள், வேளாண்மை சார்ந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இதுதான் பேரணியின் நோக்கம் என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் திகாயத் கூறினார்.
ஒன்றிய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது நாங்கள் செல்வோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். “சுதந்திரப்போராட்டம் 90 வருடங்கள் தொட ர்ந்தது, எனவே இந்தப் போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியாது” என்றும் திகாயத் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியாக உத்தரவாதம் அளிக்காவிட் டால் புதன்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.