தஞ்சாவூர், ஜூன் 4- இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வியா ழக்கிழமை தஞ்சாவூர் கணபதி நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்டப் பொ ருளாளர் என்.பாலசுப்பிர மணியன், சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் கே.ராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோ கரன், பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு ரூ.7,500 மாநில அரசு 5 ஆயிரம் என ரூ. 12,500 வழங்க வேண்டும்.
100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து, சம்பளத்தை 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின் சாரம் வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும். சிறு, குறு தொழில் முனை வோருக்கு கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். கொரோனா தொற்றை விரைந்து கட்டுப் படுத்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மருத் துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை களை வலியுறுத்தி வரும் ஜூன் 9 ஆம் தேதி தனி மனித இடைவெளியை பின்பற்றி, தஞ்சை மாவட்டத்தில் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது” என முடிவு செய்யப்பட்டது.