தஞ்சாவூர், செப்.19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க சார்பில் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் வி.ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி யன் தொடங்கி வைத்தார். தலைமை எழுத்தர் சிவலிங்கம் வரவேற்றார். முகாமில் தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பேரூ ராட்சியில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முழுமையான கண் பரி சோதனை செய்தனர். இதேபோல் பெருமகளுர் பேரூராட்சியில் பணிபுரி யும் 60 ஊழியர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. பொருளாளர் மைதீன்பிச்சை நன்றி கூறினார்.