தஞ்சாவூர்:
ஊரடங்கு காலத்தில் எவ்வித அறிவிப்புமின்றி தினக்கூலி ஊழியர்களை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக நாள் ஊதியப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரிபணியாளர்கள் சார்பில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கு.சின்னப்பனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:“தமிழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் நாள் ஊதி யத்தில் கணிப்பொறி இயக்குனர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் என்ற நிலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றோம்.இந்நிலையில் ஊரடங்கை காரணம் காட்டி பணியாளர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது, அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழ் பல்கலைக்கழகத்தில், முன்னறிவிப்பு இன்றி நாள் ஊதியப் பணியா ளர்களை பணியிலிருந்து நீக்கியது, அரசின் முடிவுக்கு எதிராக உள்ளது. வெளியேற்றப்பட்ட நூற்றுக் கணக்கான நாள் ஊதியப் பணி யாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி எங்கள் குடும்பம் அழிந்துவிடாமல் இருப்பதற்கு உரியஉதவிகளை செய்ய வேண்டும்’’இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது. இந்த மனுவின் நகல், தமிழகமுதலமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர், துணைவேந்தர் மற்றும்ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு ள்ளது.