பேராவூரணி, ஜூன் 6- தஞ்சை மாவட்டம் அலிவலம் கிராமத்தில் பொது வினி யோகத் திட்ட புதிய கட்டட திறப்பு விழா மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்து, மகளிர் குழுக்களுக்கு ரூ 8 லட்சம் கடன் தொகை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திரு ஞான சம்பந்தம், பேராவூரணி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், ஊராட்சி தலைவர் ஆசைத்தம்பி, கூட்டுறவு சங்கத் தலை வர்கள் சாமியப்பா, ஆனந்த், அதிமுக தொகுதி இணைச் செயலாளர் பழனிச்சாமி கலந்து கொண்டனர்.