தஞ்சாவூர், ஜன.7- தஞ்சையில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தஞ்சை முது நிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் தொழிலாளர்களின் 11 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றித் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்ட மும், போராட்ட விளக்க வாயிற்கூட்ட மும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச மாநில பொதுச்செயலாளர் கோ.சி.வள்ளுவன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் கா. இளவரி, ஏஐசிசிடியு மாநில பொ துச்செயலாளர் கே.கோவிந்தராஜ், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சி.சந்திரகுமார், டாக்டர் அம்பேத் கர் தொழிற்சங்க மாநில பொ துச்செயலாளர் ஜி.ராஜமாணிக்கம் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “விலைவாசி யைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இருக்கும் வேலை வாய்ப்புகளை பறிக்கக்கூடாது. அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிக்கக் கூடாது. பொதுத்துறை நிறுவ னங்களை சீரழிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முன்னதாக பொது வேலை நிறுத்தத்தை விளக்கி கூட்டம் நடைபெற்றது.