தஞ்சாவூர், ஆக.19- பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், அய்யம்பேட்டை, பாபநாசம், வீரமரசன்பேட்டை, பெருமகளூர், பேராவூரணி, திருவையாறு, பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.