tamilnadu

img

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்... நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்...

தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்ட பாச னத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறப்பது குறித்து தமிழகமுதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பினை வெளியிடுவார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கரூர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மேட்டூர் அணை குறுவை பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி திறப்பது குறித்தும் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் குறுவை சாகுபடியை சிறப்பாக செய்வது குறித்தும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை அறிய நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பது குறித்து பல்வேறு சங்கங்கள் குறித்த காலத்தில் நீர் திறக்க வேண்டும் என்றும் சிறப்பு தூர்வாரும் பணிகளை செம்மைப் படுத்தி, விடுபட்ட பகுதிகளை தூர்வார முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு மனுக்களையும்  வழங்கினார்கள்.உலகிலேயே மிகச்சிறந்த நீர்ப்பாசன முறை காவிரி டெல்டா பகுதியில் மட்டுமே உள்ளது. இதை பராமரிப்பு செய்ய காலியாக உள்ளபொறியாளர்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு நீங்கள் தெரிவித்த கருத்துக்கள், கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.விவசாயிகளின் கோரிக்கை களை ஏற்று கடைமடை வரை எல்லா பகுதிகளும் தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் சிறப்பாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை நானும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளரும், சிறப்பு அதிகாரிகளும், துறை உயர் அலுவலர்களும், மாவட்ட ஆட்சியர்களும் நேரில் வந்து ஆய்வு செய்து கண்காணிப் போம். விவசாயிகளின் நலனுக்காக இவ்வரசு அனைத்து திட்டங்களை யும் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும்  என்றார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்கப்படும், மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பாணை வெளியிடுவார். அதே போல் தூர்வாரும் பணி தொடர்பாக நிதித்துறைக்குஉரிய திட்டமதிப்பீடு அனுப்பப் பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆனதாலும், கொரோனா தொற்று காலமாக இருப்பதாலும் துறை சார்ந்த குறைபாடுகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து களையப்படும் என்றார்.இக்கூட்டத்தில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சி யர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.