tamilnadu

டெல்டாவை பாலைவனமாக்க  மத்திய அரசு முயற்சி’: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

கும்பகோணம்: காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்துரசன் குற்றம் சாட்டி னார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்பு மாநில மாநாடு நடை பெற்றது. மாநாட்டுக்கு முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டாவில் நெல் கொள்முதலில் பெரும் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து  நாங்கள் கூறி வருகிறோம். அந்த முறைகேடுகளை களைய வேண்டும். லாரிக்கு மாமுல் கொடுக்க விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு, அங்கு பணியாற்றும் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து, நிர்வாகம் நன்றாக நடக்கிறதாக கூறி போலி நாடகம் நடத்துகிறார்கள். தற்போது தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நோட்டீஸ் வழங்கி யுள்ளனர். டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் இந்த அரசு, நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயித்து முன் தயாரிப்பு வேலையில் ஈடுபட வேண்டும். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். தமிழக முதல்வர் தில்லிக்கு எழுதிய கடிதத்தில் இனிமேல் இங்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என கூறியுள்ளது. ஏற்கெனவே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி யுள்ளதை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலம் என சட்டமாக மாற்ற வேண்டும். இதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறுவது விவ சாயிகளை ஏமாற்றும் செயலாகும். காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.