tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக அரசு மறைமுக சதி இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

திருவாரூர், டிச.1- திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:       அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விட்டு, அதாவது நீதிமன்றத்தில் தேர்தலை நிறுத்த என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விட்டு எதிர்கட்சிகள் தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுப்ப தாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் தேர்தலை சந்திக்க அதிமுக அரசுக்கு கடுகளவும் விருப்பமில்லை. மாவட்டங்களை புதி தாக பிரிப்பது, இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வராத நிலை, நீதிமன்ற உத்தரவை கூட செயல்படுத்தாத நிலை போன்ற பல்வேறு நிலைகளில் உள்ளாட்சி தேர்த லுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் அனைத்து வழிவகை களையும் அதிமுக அரசு செய்து உள்ளது. மத்திய அரசிடம் உள்ள நல்லுறவை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியை பெற்று இருப்பதாக கூறிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டை சார்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கா அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கா ஒன்றுக்கு பதிலை அளிக்க வேண்டும். நீட் நுழைவு தேர்வு மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக்க ல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் மத்திய அரசி டம் உள்ள நல்லுறவை பயன்படுத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கினை பெற வேண்டும். அப்படி பெறாவிடில் தமிழ கத்திற்கு பெற்ற மருத்துவக் கல்லூரிகளால் பயன் ஏற்படப் போவதில்லை. 

ரூ.1000 கோடிக்கு மராமத்து என்பது பொய் 
அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை யால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. ஓட்டு வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. மன்னார்குடி மற்றும் அண்டை மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து பலர் உயிரழந்துள்ளனர். மழைநீர் சூழ்ந்ததால் பல இடங்க ளில் பயிர்கள் முழ்கி கிடக்கின்றன. வீடுகளில் வசிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. கோவில்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன.  பள்ளிக் கூடங்களில் மாணவ மாணவியர்கள் கல்வி கற்க முடியாத நிலைக்கு பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஏனைய அமைச்சர் கள் தமிழகத்தில் மராமத்து பணிகளுக்கு ரூ.1000 கோடி செலவு செய்துள்ளதாக திரும்ப திரும்ப பொய் பேசி வருகின்றனர். மராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடியை முறையாக செலவு செய்திருந்தால், பாசன ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரி இருந்தால் பாதிப்புகள் என்பது அறவே ஏற்பட்டிருக்காது. மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில்  ஊழல் முறைகேடுகள் நடைபெற்ற தால் தான் தற்போது ஓர் இரு நாட்கள் பெய்த மழைக்கே இது போன்ற பாதிப்புகள் ஏறபட்டிருக்கிறது. மழையால் வீடுகளை இழந்த, உயிரழந்த குடும்பங்களுக்கு உடன டியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.