tamilnadu

நாட்டுப் படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்

தஞ்சாவூர் அக்.31- மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை யை அடுத்து நவம்பர் 2 ஆம் தேதி அன்று நடுக்கடலில் விசைப் படகுகளை முற்றுகையிடும் போ ராட்டத்தை நாட்டுப்படகு மீனவர் கள் கைவிட்டனர்.  தஞ்சை மாவட்டம், சேதுபாவா சத்திரம் அருகில் உள்ள 34 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர் நலச்சங்க கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடை பெற்றது. இக்கூட்டத்தில், “கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடித் தொழில் செய்யும் விசைப் படகுகள் மீது முறையான நடவ டிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், தடையை மீறி தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித் தொழில் செய்யும் விசைப் படகுகளை நவ.2 ஆம் தேதி நடுக் கடலில் சென்று முற்றுகையிட்டு, தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பறிமுதல் செய்வது எனவும், இதில் 500 நாட்டுப்படகுகள் மூலம் சென்று நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொள்வது எனவும்” இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் சிவ குமார் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ரவி, அதிராம்பட்டினம் பன்னீர், வீரப்பன் ஏரிப்புறக்கரை ரவி, பத்ம நாதன் மற்றும் சண்முகம், சந்திர சேகர், அந்தோணி பிச்சை உள்ளிட்ட 34 மீனவ கிராம தலைவர்கள் பங் கேற்றனர்.  விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மாநில மீனவர் பேரவை பொதுச் செயலாளர்  மல்லிப்பட்டினம் தாஜூதீன், மாவட்டத் தலைவர் சேதுபாவா சத்திரம் ராஜமாணிக்கம், செல்வக் கிளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்றவைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் மீது சட்டப்படி கடு மையான நடவடிக்கை எடுக்கப் படும்” என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் சென்று விசைப்படகுகளை முற்றுகை யிடும் போராட்டத்தை கைவிட்ட னர்.