சென்னை, செப். 5- சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் வேளச்சேரி பகுதி 15வது மாநாடு வெள்ளியன்று (செப்.3) நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.நடராஜன், சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுதி தலைவராக சண்முகம் ஆனந்த், செயலாளராக சூரிய பாலக்குமார், பொருளாளராக எஸ்.குமாரதாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.