tamilnadu

img

சென்னைக்கு தஞ்சை சுகாதார பணியாளர்கள்? தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முடங்கும் அபாயம்

தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியா ளர்களை சென்னைக்கு கொரோனாத் தொற்று மீட்பு பணிக்கு அனுப்பக் கூடாது என தஞ்சை சட்டப் பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய பாதிப்புகள், தமிழகத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சுமார் 34 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மேலும் ஜூலை மாத இறுதிக்குள் 1.5 இலட்சத்திற்கும் மேலான கொரோனா தொற்று ஏற்படுமென எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 125 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக் கப்பட்டு, அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 தஞ்சை மாநகராட்சியில் நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் சுகாதார ஆய்வாளர்களை, சென்னைக்கு பணிக்கு அனுப்ப பட்டியல் தயாரிப்பதாக செய்திகள் வரு கின்றன. ஆனால், தற்போது சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் தஞ்சைக்கு வந்து கொண்டு இருப்பதால், தஞ்சையில் மேலும் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.  ஆகையால் தஞ்சையில் நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஆய்வாளர்களை சென்னை க்கு அனுப்பினால், தஞ்சையில் மீட்பு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவர்களை தொடர்ந்து தஞ்சை யிலேயே கொரோனாத் தடுப்பு மீட்பு பணி புரிய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறப் பட்டுள்ளது. மனுவின் நகல் தஞ்சாவூர் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணை யர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள் ளது.