தஞ்சாவூர்
தமிழகத்தில் கொரோனாவின் கொடூர ஆட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனைக்கு புதிய நோயாளிகளாக செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். ஒரு நாளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், அவர்கள் இயல்பான நிலைக்கு திரும்புவதில்லை. இதனால் தமிழக மக்கள் கொரோனா பெயரை கேட்டாலே ஒருவித கலக்கத்துடன் உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் தோகூர் பகுதி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ள கருணாகரன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் இன்று (ஆக., 22) அவர் உயிரிழந்தார்.