தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்திற்கு புதிய ஆட்சிக் குழு உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், புலத் தலைவரா கவும் பணியாற்றி வரும் முனைவர் அரங்க.பாரி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் சார்பாக, தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பி னராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிப்.17 (திங்கள்கிழமை) அன்று தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியனைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று பொறுப்பேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தர் சார்பாக ஆட்சிக் குழு உறுப்பினராக பணியாற்றி வந்த தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் மற்றும் பண் பாட்டுப்புலத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சு.பாலசுப்பிரமணியனின் ஆட்சிக்குழு உறுப்பினர் காலம், கடந்த ஆண்டு டிச.18 அன்று நிறைவுற்றதைத் தொடர்ந்து இப்புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.