சென்னை:
அதிமுக ஆட்சிக் காலத்தில் 24 வேளாண் சந்தைக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. இந்தக் குழுக்களுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-வேளாண் சந்தைக் குழுக்களை நிர்வகித்த தனி அலுவலர்களின் பதவிக் காலமானது கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியுடன்நிறைவடைந்தது. தனி அலுவலர்களின் பதவிக் காலம் முடிவடையும் முன்பே, சேலம், தஞ்சாவூர், குமரி, நெல்லை, புதுக் கோட்டை, இராமநாதபுரம், கோவை, திண்டுக்கல், நாகை, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, ஈரோடு, தருமபுரி ஆகிய 14 சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்னர்.மேலும், திருப்பூர், விருதுநகர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், நீலகிரி, காஞ்சிபுரம், நாமக்கல், தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலான 10 சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தேனி சந்தைக் குழுவைத் தவிர்த்து மற்ற குழுக்களில் அவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், 24 சந்தைக் குழுக்களுக்கு பணியமர்த்தப்பட்ட உறுப்பினர்கள் கடந்த ஜூலை 23-ஆம் தேதியன்று திரும்பப் பெறப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேளாண் சந்தைக் குழுக்களை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்துக்கு தனி அலுவலர்களின் பதவிக் காலம் இருக்க வகையில் வழி வகுக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.