கும்பகோணம், மே 23- மத்திய, மாநில அரசு, பொதுத்துறை மற்றும் ஓய்வூதியர்கள் ஒருங்கிணை ப்புக் குழு சார்பில் குடந்தை காந்தி பூங்கா முன் மத்திய- மாநில அரசுகளின் தொழிலா ளர், மக்கள் விரோத சட்டங்க ளை வாபஸ் பெற வலி யுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். ராஜகோபாலன் தலைமை வகித்தார். விரை வுப் போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாநில செயலாளர் எம். கண்ணன் கண்டன உரை யாற்றினார். வங்கி ஊழியர் சங்கம் அஸ்வந்த் மின்வாரி யம் துறை தேவேந்திரன் தொலைதொடர்பு துறை ராமச்சந்திரன் அஞ்சல்துறை விஜயகுமார் ஆசிரியர் காளீஸ்வரன் அரசு ஓய்வூதி யர் சங்கம் அன்புமணி துரைராஜ் கலைச்செல்வி பிரேமா கண்ணன், ஆசிரி யர் இளையராஜா மற்றும் அனைத்துத் துறை ஊழியர் கள் கலந்து கொண்டனர்.