தஞ்சாவூர், ஜூலை 20 - கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்ட, அவசர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழகம் தழுவிய ஒரு கோடி கையெ ழுத்து பெறும் இயக்கம் தஞ்சையில் திங்க ளன்று தொடங்கியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகி த்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரமோகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செய லாளர் சாமி.நடராஜன் துவக்க வைத்துப் பேசி னார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி. செந்தில்குமார் நன்றி கூறினார். திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டனர்.