tamilnadu

img

புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 16- இலவச மின்சாரத் திட்ட த்தை பறிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள புதிய மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யய வலியுறுத்தி புது க்கோட்டையில் அனைத்து கட்சியின் சார்பில் வியாழ க்கிழமையன்று கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவசர சட்டம் 2020, வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 என விவசாயிகள், ஏழைகளைப் பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி எம்எல்ஏ தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.