தஞ்சாவூர், ஏப்.14-இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி சட்ட மாமேதை அண்ணல்அம்பேத்கரின் 129-வது பிறந்த தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழுஉறுப்பினர்கள் ஆர்.புண்ணியமூர்த்தி, எஸ்.ராஜன், என்.சிவகுரு, சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சத்யநாதன், செல்வராஜ், எம்.வடிவேலன், சாந்தா, காப்பீட்டு கழக ஊழியர்கள், வாலிபர் சங்க காதர் உசேன், ஹரிகரன் கலந்துகொண்டனர்.
நிறைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் பி.எம்.இளங்கோவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தமுஎகச கிளைத் தலைவர் பி.ஆயிராசு, சிபிஎம்பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.காந்தி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் டி.முருகேசன், தமுஎகச கிளைப் பொருளாளர் பி.தாமரைச்செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பூதலூர் வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.ரமேஷ்,விதொச ஒன்றிய செயலாளர் எம்.சம்சுதீன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நகரத் தலைவர் எஸ்.ரஜினி, சொ.அழகுமலை, விதொச பூதலூர் வடக்கு ஒன்றிய தலைவர் சி.சிவசாமி, தீண்டாமை ஒழிப்புமுன்னணி ரெங்கராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், மாதர் சங்க ஒன்றிய தலைவர்கலைச்செல்வி மற்றும் அண்ணா ஓட்டுநர் சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி
பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச்செயலாளர் ஆறு.நீலகண்டன், பைங்கால் மதியழகன், மாரிமுத்து, திராவிடர்விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தோழமைசமூக அமைப்பு உதயகுமார், தலைமை ஆசிரியர் வீர.சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா.பாலசுந்தரம், பி.காசிநாதன், டி.பன்னீர்செல்வம், ராசமாணிக்கம், சித்திரவேல், சிவகாமி, திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் என்.அசோக்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன், பதிவாளர் ச.முத்துக்குமார், பேராசிரியர்கள் பா.ஜெயக்குமார், சா.இரவிவர்மன், துணைப்பதிவாளர்கள் கோ.பன்னீர்செல்வம், முனைவர் இரா.முரளி உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
வீரவணக்க உறுதிமொழி ஏற்பு
கும்பகோணம் சிஆர்சி தலைமை அலுவலகம் முன்பு உள்ள அம்பேத்கர்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகர செயலாளர் செல்வமணி, சிபிஎம்மாவட்டக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், பார்த்தசாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி,குடந்தை நகர செயலாளர் செந்தில் குமார், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் மணிமாறன், சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன், தாமோதரன், திக மாவட்டதலைவர் கௌதமன், நகர தலைவர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் குருசாமி,விசிக மாவட்டச் செயலாளர் தமிழருவி கலைச்செல்வன், நீலப்புலிகள் இயக்கநிறுவனர் இளங்கோவன், அம்பேத்கர் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்கள் சேதுராமன் கலைச்செல்வன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராமர், நகர செயலாளர் சரத்ராஜ் உள் ளிட்ட மரியாதை செலுத்தி வீரவணக்க உறுதிமொழி ஏற்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டசெயலாளர் ராஜா, பிஎஸ்என்எல்இயுவினர், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ஜோன்ஸ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி,நடராஜன் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெங்கடாஜலம், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் நிகழ்ச்சியில் அருணன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் பொன்னமராவதியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சித.மணிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டுரங்கன், திருமயம் தொகுதிசெயலாளர் வை.சுடர்வளவன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தமிழ் அமுதன், தெற்கு ஒன்றியச் செயலாளர் வெ.சுரேஷ், திராவிடர் கழக இளைஞர் அணி பொறுப்பாளர் மனோகரன் கலந்து கொண்டனர்.அறந்தாங்கியில் எஸ்சிஎஸ்டி அரசுஊழியர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்ச்சிநடைபெற்றது. தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி, திருச்சி மறுமலர்ச்சி கழக மாவட்ட தலைவர் டாக்டர் ந.பெரியசாமி, எஸ்சிஎஸ்டி அரசுஊழியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கே.எம்.சுப்பையா, தெய்வகனி, வடிவேலு, கருப்பையா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன், கே.தங்கராஜ், வழக்கறிஞர்கள் பழனியப்பன், லோகநாதன் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.