tamilnadu

img

8 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச்சில் அடிக்கல் நாட்டு விழா

சென்னை:
தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 8 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டுகிறார்.தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் மாதத்தில்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டஉள்ளார்.

மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு இராமநாதபுரத்திலும், பிற்பகல் 3 மணிக்கு விருதுநகரிலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. மார்ச் 4ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.மார்ச் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல்லிலும், மாலை 4 மணிக்கு திண்டுக்கல்லிலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்நாட்டுகிறார். மார்ச் 7ஆம் தேதி காலை 11 மணிக்குநாகையிலும் மார்ச் 8ஆம் தேதி காலை 10 மணிக்குதிருவள்ளூரிலும், மார்ச் 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூரிலும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை தெரிவிக்கும் வகையிலும், அடிக்கல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விவரங்களைப் பெறும் வகையிலும், மத்திய சுகாதாரத்துறைக்கு, தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.