“திரைப்படங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. திரைப்படங்கள் மூலம்பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகம்சந்திக்கும் பிரச்சனைகளைக் மக்களிடம்கொண்டு செல்ல முடியும் . திரைப்படங்கள்சமூகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்”
-புதுச்சேரி பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மித்சிங்
*****************
“புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பாகக் குறும்படங்கள் எடுத்து வருவது பாராட்டுக்குரியது . சிறந்த குறும்படங்களைக் கடற்கரையில் திறந்தவெளியில் திரையிட்டால் ஆயிரக்கணக் கான மக்களை சென்று சேரும் . அதுகுறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும்”
- புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமிநாராயணன்
*****************
“மும்பையில் இரண்டு கட்டிடங்களில் மிகப்பெரிய திரைப்பட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதை அனைவரும் சென்று பார்க்க வேண்டும். மும்பையில் படித்த தமிழக மாணவர்கள் பலர் தரமான
குறும்படங்களைத் தயாரித்து வருகின்றனர்.”
-மும்பை சர்வதேச திரைப்பட விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அனில் குமார்.
*****************
“உலகின் பொதுமொழியாக சினிமா விளங்குகிறது”
-தமுஎகச கவுரவத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன்.
தொகுப்பு: லெனின் பாரதி