தஞ்சாவூர், ஜூலை 2- தமிழகத்தில் அரசுப் பள்ளி களை பாதிக்கும் வகையில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை தரம் உயர்த்தக் கூடாது என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொட க்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொ டக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுப.குழந்தைசாமி தமிழக முத ல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள மனுவில், “எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை நடத்த தனியாருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பள்ளிகளில் ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை கள் அதிக பணம் செலுத்தி படிக்க இயலவில்லை என்பதால் தற்போது அரசு பள்ளிகளிலும் நர்சரி வகுப்புகளை அரசு தொ டங்கி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகங்கள் தங்களது பள்ளிகளை 6 முதல் 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தி தரவேண்டும் என அரசுக்கு கோ ரிக்கை வைத்தும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்ப ங்கள் அனுப்பியும் வருவதாக தக வல் வெளியாகியுள்ளது.
சுய நிதியில் இயங்கும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை தரம் உயர்த்த அரசு அனுமதி வழங்கி னால் ஏழை-எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த பெற்றோர்கள் குழ ப்பத்திற்கு ஆளாவர். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை தரம் உய ர்த்திட அனுமதிப்பது அனைவ ருக்கும் இலவச கட்டாய கல்வி என்ற அடிப்படையையே தகர்த்து விடும். தமிழகத்தில் கடைக்கோடி கிராமங்கள் வரை செய ல்பட்டுவரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி களில் படித்துவரும் மாணவர்க ளும், பெற்றோர்களும் பாதிப்படை வார்கள். மேலும் தமிழக கல்வி த்துறையில் ஏற்படுத்தியுள்ள மறு மலர்ச்சி திட்டங்கள் கேள்விக்கு றியாவதுடன் மிகப்பெரிய பின்ன டைவு ஏற்படும். தமிழக கல்வித்து றையின் சிறப்பான எதில்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்ப டும். எனவே நர்சரி மற்றும் பிரை மரி பள்ளிகளை தரம் உயர்த்த அரசு அனுமதிக்கக்கூடாது” என குறிப்பிட்டுள்ளது.