கும்பகோணம், ஜன.6- உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திரு விடைமருதூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட நாச்சியார் கோவில் ஊராட்சி மன்ற தலை வர் பொறுப்புக்கு போட்டியிட்ட மகேஸ்வரி உமாசங்கர் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து திங்கட்கிழமை நாச்சியார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணி யன் முறைப்படி தேர்வு செய் யப்பட்ட நாச்சியார் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் மற்றும் 12 ஊராட்சி மன்ற வார்டு உறுப் பினர்களுக்கு பதவி பிர மாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி யின் கணவர் உமாசங்கர், திமுக பொதுக்குழு உறுப்பி னர் சுந்தர. ஜெயபால், திமுக கழக ஊராட்சி செயலாளர் பூபதி மற்றும் கூட்டணி கட்சி யினர், பொதுமக்கள், ஊராட்சி மன்ற செயலர் வரத ராஜன் பணித்தள பொறுப்பா ளர்கள் துப்புரவு பணியாளர் கள் ஓஎச்டி ஆபரேட்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஊராட்சி தலைவர் பொறுப்பேற்றவு டன் தனது பணியை ஊராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து தொடர்ந்து கண்கா ணிக்கவும் ஊரில் தெருக்களை குவிந்து கிடக்கும் குப்பைகளை உட னடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து பொக் லைன் இயந்திரம் மூலம் குப்பைகளை அள்ளும் பணி நடைபெற்றது.