தந்தை புகார்
சென்னை,டிச.5- சென்னை ஐஐடியில் நவம்பர் 9-ஆம் தேதி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார். இது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழனன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் பாத்திமா வின் தந்தை அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என வலியுறுத்தினேன். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக தெரிவித்தார். பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது. மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரிக்கை வைத்தேன். மகள் தொடர்பான ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் அழித்துவிட்டது என்று தெரிவித்தார்.