தஞ்சாவூர், ஏப்.21- தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது. வயலூர் பகுதியில் சென்ற போது எதிரே வந்தகார் மோதும் விதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. எனவேமோதுவதைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் முயன்ற போதுகட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் பேருந்துகவிழ்ந்தது. இதில் மானாங்கோரையைச் சேர்ந்தஜெயக்குமார் மகன் சண்முகசுந்தரம்(30) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவர் வயலூரை அடுத்துள்ள மானாங்கோரை நிறுத்தத்தில் இறங்குவதற்கு தயாராகப் படிக்கட்டுப் பகுதியில் நின்றிருந்த போது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிந்தது.மேலும் பந்தநல்லூரைச் சேர்ந்த குந்தலாம்பிகை(62), திருவிடைமருதூர் ராஜலட்சுமி(67), சுவாமிமலை ஆனந்தி(21), கடலூர் மாவட்டம் வீராந்தபுரம் தேவகி(58), பின்னத்தூர் தமிழ்ச்செல்வி(85) உள்பட 11 பெண்கள், 2 குழந்தைகள், 11 ஆண்கள் என மொத்தம் 24 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.