tamilnadu

img

தோள்பட்டை காயம் இத்தாலி ஓபனில் ஷரபோவா விலகல்

ஐரோப்பா கண்டத்தின் முன்னணி ஏடிபி டென்னிஸ் தொடரான இத்தாலி ஓபன் தொடர் வருகிற 13-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரிலிருந்து ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான ஷரபோவாதோள்பட்டை காயத்தால் விலகியுள்ளதாக இத்தாலி ஓபன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.போட்டி அட்டவணையில் ஷரபோவா ஏற்கெனவே இடம்பெற்றுள்ளதால் அவருக்குப் பதிலாக ஸ்லோவாகியாவைச் சேர்ந்த விக்டோரியா குஸ்மோவா சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஷரபோவாகடந்த 4 மாதங்களாக டென்னிஸ் தொடரில் களமிறங்கவில்லை.கடைசியாக ஜனவரி மாதம் டென்னிஸ் தொடரில் களமிறங்கிய ஷரபோவா பிப்ரவரி மாதம் வலது கை தோள்பட்டையில் அறுவைசிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து இன்னும் முழுமையாகக்குணமடையாததால், இத்தாலி ஓபன் தொடரில் விலகியுள்ளார்.ஷரபோவா 2011,2012 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரை வென்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.