tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதியில் ரபேல் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன் றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், 23-வது இடத்தில் உள்ள இத்தாலியின் பெர் ரெட்டினியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட் டத்தில் நடால் 7-6 (8-6), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரி சையில் 5-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் இல்லாத பல்கேரியாவின் டிமிட்ரோவை  7-6 (7-5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.   

ஆடவர் ஒற்றையர் - இறுதிப்போட்டி

  • நடால் (ஸ்பெயின்) - மெத்வதேவ் (ரஷ்யா)
  • நேரம்: நள்ளிரவு 1:30 மணி (திங்கள் - இந்திய நேரப்படி)
  • பரிசுத்தொகை: 
  • வெற்றிபெறுபவருக்கு - ரூ.27 கோடி (கோப்பையுடன்) 
  • தோற்பவருக்கு  - ரூ.13 கோடி (கோப்பையுடன்)