tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.  

ஆடவர் ஒற்றையர் 

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மாரின் சிலிச்சை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் போராடி காலிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சின் மோன்பில்ஸ், ஸ்பெயினின் பப்லோவை 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.  

மகளிர் ஒற்றையர் 

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் கனடாவின் பியான்கா, அமெரிக்காவின் டவுன்சென்டை 6-1, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியை, பெல்ஜியத்தின் மெர்டேன்ஸ் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.