தென்காசி மாவட்டம் சுரண்டையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழை-எளிய மக்களிடம் நிர்ப்பந்தப்படுத்தி வட்டி வசூலிப்பதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. சுயஉதவி குழுக்களிடம் நுண் நிதி நிறுவனங்கள் தமிழக அரசு உத்தரவை மீறி வட்டி வசூல் செய்கின்றன. இதைத் தடுக்க வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் புதூர் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் பீடித் தொழிலாளர் சங்க (சிஐடியு) கிளைத் தலைவர் பொட்டுசெல்வம், மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.வேல்முருகன், ஒன்றியச் செயலாளர் ஆரியமுல்லை, வி.ச. நிர்வாகி சங்கரன் மற்றும் பீடி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.