ஹைதராபாத், ஏப்.17-தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தனதுகட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் ரூ.23 கோடியே 10 லட்சம் அளவிற்கு பாஜக பணம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.2018 அக்டோபர் 6-ஆம் தேதி முதல், டிசம்பர் 11-ஆம் தேதி வரை இந்தப் பண விநியோகம் நடந்துள்ளது.தெலுங்கானா மாநிலத்திலுள்ள பாஜக-வின் மண்டலத்தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் விகிதம் பாஜக பணம் வழங்கியுள்ளது. இந்த வகையில், 531மண்டலத் தலைவர்களுக்கு மட்டும் ரூ. 10 கோடியே 60 லட்சம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணம் பெற்றவர்களில் பெரும்பாலானவர் கள், பாஜக-வின் இளைஞர் பிரிவான, யுவமோர்ச்சா அமைப் பினர் என்று கூறப்படுகிறது.இதுதவிர, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருக்கும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை,தனிப்பட்ட செலவுகளுக்காக பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையிலும் ரூ. 12 கோடியே 50 லட்சம் அள்ளி வீசப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வால் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை என்பது தனிக் கதையாகும்.