ஆலப்புழா:
கேரள மாநிலத்தில் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நான்கு வயது சிறுமிக்கு மிக அவசியமான மருந்தை சுமார் 150 கி.மீ. தொலைவு இருசக்கர வாகனத்தில் பயணித்துச் சென்று கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் வசித்த வரும் சிறுமிக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. மாதந்தோறும் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்துக்கு சிறுமியை அவரது பெற்றோர் கீமோதெரபிக்காக அழைத்து வருவது வழக்கம்.
ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், கீமோதெரபி மையங்கள் மூடப்பட்டுள்ளன. மருந்துகள் மட்டும் சிறுமிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால், அவரது மாவட்டத்தில் புற்றுநோய்க்கு மருந்து கிடைக்காமல், சிறுமி சிரமப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் காவல்துறையின் உதவியை நாடினர். காவல்துறை அதிகாரி அந்தோணி ரதீஷ், தனது நண்பரும், முன்னாள் காவலரும், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சார்ஜென்டாக இருப்பவருமான விஷ்ணுவைத் தொடர்பு கொண்டார்.அவர் திருவனந்தபுரத்தில் இருந்து மருந்து கொண்டு வர உதவி செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி, அந்த சிறுமிக்குத் தேவையான மருந்தை வாங்கிக் கொண்டு காலை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்அவர் மாலை ஐந்து மணிக்கு ஆலப்புழாவை சென்றடைந்து அந்தச் சிறுமியின் குடும்பத்தினரிடம் மருந்தை ஒப்படைத்தார்.