தெலுங்கானா, அக்.6- தெலுங்கானாவில் 50,000 அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை சனியன்று (அக்.5) நள்ளிரவில் துவக்கினர். தெலுங்கானா அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண அரசு முன்வராததால் போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி னர். அரசு எஸ்மா சட்டத்தை பயன் படுத்துவதாகவும், வேலை நிறுத் தம் செய்வோர் பணிநீக்கம் செய் யப்படுவர் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. எனினும் போராட் டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தை (டிஎஸ் ஆர்டிசி) அரசுடன் இணைக்க வேண்டும் என்பது தொழிலாளர் களின் முக்கிய கோரிக்கையாகும். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு முடிவும் மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவில்லை. இதுகுறித்து கூட்டு போராட்டக்குழுவின் தலை வர் அஸ்வத்தாமா ரெட்டி கூறுகை யில், இந்த வேலைநிறுத்தப் போரா ட்டத்தில் 50,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். டிஎஸ்ஆர்டிசியை பாதுகாக்க அனைவரது ஆதரவும் தேவை என்றார்.