tamilnadu

img

மறக்க முடியாத ஜூலை -16

2004 ஆம் ஆண்டு ஜூடில 16ஆம் தேதி கும்ப கோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சளிங்குழந்தை கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் கண்ணீர் வருகிறது. இந்தச் சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழ்நாடு அரசாங்கம் இதிலிருந்து பாடம் பெற்றார் களா என்றால் இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. அனைத்து மாணவ, மாண வியர்களும் தரமான கல்வியைக் கற்பதற்குத் தேவை யான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. ஆனால்  அரசு ஒரு உத்தரவுப் போட்டு பள்ளிகளில் இருந்த கூரைக் கட்டிடங்களை மட்டும்தான் அகற்ற முடிந்தது. பாதுகாப்பான வகுப்பறைகள், தேவையான சுத்தமான கழிவறைகள். சுத்தமான குடிநீர் என்பன போன்றவை  இன்னும் சவாலாகவே இருக்கிறது. கும்பகோணம் தீ விபத்து சம்பந்தமாக விசாரணை செய்ய நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு விரிவாக விசாரணை செய்து நீதிபதி சம்பத் சமர்பித்த விரிவான அறிக்கை யில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவே கூடாது என்று பல ஆலோசனைகளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று வரை எந்தப் பள்ளியும் சம்பத் கமிசன் சொல்லியுள்ள ஆலோசனை களை பின்பற்றவில்லை. 

சம்பத் கமிஷன் அறிக்கையில் கூறியபடி பள்ளிக ளுக்கு கட்டிட உறுதிச் சான்றிதழ் கூடுமானவரை பொதுப் பணித்துறையில் வாங்க ஆணையிட வேண்டும். அதுபோல் தடையின்மைச் சான்றிதழ் வழங்கும் தீயணைப்புத்துறை கடுமையாக சோத னையை செய்து பாதுகாப்பான ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும். இதைப் போல சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் சம்பத் கமிஷன் அறிக்கையில் கூறியபடி  அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்று கடுமையா கச் சோதனை செய்து சுகாதாரச் சான்றிதழ் வழங்க வேண்டும். அதுபோல் பள்ளிகளுக்கு பொதுக் கட்டிட அனுமதி தரும் வட்டாட்சியர் மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும. நாம் வழங்கும் சான்றிதழ் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்புச் சம்பந்தப்பட்டது. எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதை கவனத்தில் கொண்டு அனைத்து துறையிலும் கொடுக்கப்பட்ட சான்றிதழ் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாகச் சோதனை செய்து பொதுக் கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும். கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளிக் குழந்தை களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

எஸ்.கணேசன், மதுரை

இன்று ஜூலை 16, கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து நாள்