அரசு அறிவிப்பு
சென்னை,ஏப்.20- தமிழகத்தில் தளர்வுகள் எதுவு மில்லை, ஊரடங்கு வழக்கம்போல மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பர வலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
எனினும், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்துவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த பணிகள், நெடுஞ்சாலை உணவ கங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில் களுக்கு தளர்வு அளித்து இயங்க அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து மாநில அரசு கள் முடிவு செய்யவும் அறிவுறுத்தி யிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த் துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து திங்கட் கிழமை அறிவிப்பார் என்று கூறப் பட்டிருந்தது. இதற்கென, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபு ணர் குழு தங்களது அறிக்கையை முதல்வரிடம் திங்கட்கிழமை (ஏப்.20) சமர்ப்பித்திருந்தது. அதன்படி, தமிழ கத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
ஏப்ரல் 15 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில்,ஏப்ரல் 20-க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலை கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறி விக்க வேண்டும் என்று தெரிவித்தி ருந்தது.
தில்லி, கர்நாடகம், பஞ்சாப், தெலுங் கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடை முறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைப் பிடிக்க முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய, ஏப்ரல் 16 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ் நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட் டத்தை நடத்தி, அதனுடைய முதற் கட்ட ஆலோசனைகளை முதல்வரி டம் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆரா யப்பட்டன.
இதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத் தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3 ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொட ரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழு வின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரகப்பணிகள் தொடங்கின
ஊரடங்கில் இருந்து வேளாண் சாகுபடிபணிகள், அறுவடை பணி கள், மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, தீவன உற்பத்தி ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டதால் திங்கட்கிழமை முதல் இப்பணிகள் தொடங்கின, தேயிலை, காப்பி தோட்டங்களில் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் பணியை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் தனிநபர் இடை வெளியுடன் பணி புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருந் தொழிற்சாலைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும் என்று அரசு சொன்ன போதும் பேருந்துகள், ரயில்கள் இயக் கப்படாததால் பாதியளவு ஊழியர் கள் கூட வேலைக்கு வரவில்லை. சென்னை தலைமை செயலகத்திலும் இதே நிலைதான். மாவட்ட ஆட்சி யர்அலுவலகங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர்.