இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான மாநில சிறப்பு மாநாடு வெள்ளியன்று ஈரோட்டை அடுத்த பெருந்துறை சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் துவங்கிய இம்மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, வழக்கறிஞர் உ.நிர்மலாராணி, வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைப்பட்டன.