tamilnadu

img

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரிக்கை

சென்னை,மே 4- வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க  மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி,வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கை யில் தமிழ்நாட்டில் சென்னையில் பல பகுதி களிலும், திருப்பூர் போன்ற பெருநகரங்க ளிலும் வேலை செய்து வந்த வெளிமாநிலத்  தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்க ளுக்குச் செல்ல - நூற்றுக்கணக்கில் கூடி  ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பதிவு செய்து  அவர்களை அனுப்ப தமிழக அரசு உடனடி  ஏற்பாடுகளை செய்யவேண்டும் - உடனடி யாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழி லாளர்களை அனுப்ப ரயில்மூலம்தான் சாத்தி யம். அதைத் தாமதிக்காமல் செய்யலாம்.

அதுபோலவே வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாகவும், கல்விக்காகவும் சென்றுள்ள தமிழ்நாட்டவர்கள், தமிழ்நாடு திரும்ப விழை வது இயற்கை. அங்கே அவர்கள் வேதனை யில் விம்முகின்ற நிலையை மாற்றி - எல்லா  நாடுகளிலும் இருக்கிற தமிழ்நாடு திரும்ப  விரும்புவோரை, விமானப் பயணங்கள்மூலம் விரைவாகத் திரும்ப அழைக்க மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்படி வருவோரை தனிமைப்படுத்தி, பரி சோதனைகள் நடத்தி - மருத்துவ ரீதியான நடவ டிக்கைகளை விமான நிலையங்களில் செய்து, நேரே எந்தப் பகுதியில் தங்க வைக்க வேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று, போதிய உணவு, குடிநீர், தங்கும் வசதிகளை  தனிமைப்படுத்தி - போதிய இடைவெளிகளை யும் கடைப்பிடிக்க வைத்து, பாதுகாப்புடன் அவர்  கள் வீடு திரும்பத் தேவையான ஏற்பாடுகளைச்  செய்யவேண்டியது அவசர அவசியம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்