நாகர்கோவில்,அக்.6- கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மற்றும் சிகிச்சைப்பிரிவு மையங்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேளராவில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தா லும், தமிழகத்தில் சிறப்பான சிகிச்சையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் மகப்பேறு மருத்துவம் 70 சதவீதம் அரசு மருத்துவமனையில் நடக்கிறது. மீதம் 30 சதவீதம் மட்டுமே தனியார் மருத்துவ மனைகளில் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துவதை தடுத்து நிறுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று அமைச்சர் தெரிவித்தார்.