தில்லி
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக தில்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனாவுடன் நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் சேர்ந்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதனால் அவரது குடும்பத்தினர் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.
ஆனால் ராஜீவ்காந்தி மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சைக்கு (உரிமம் இல்லாத காரணத்தினால்) மறுக்கவே மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை அவருக்கு நல்ல பலனை தர மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவர சத்யேந்திர ஜெயின் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்.