மிரண்டு நிற்கும் ஜார்க்கண்ட் மாநில மக்கள்
ராஞ்சி, நவ.23- ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் வேட்பாளர்களில் பலர் கொலை, கொள்ளை மற்றும் ஊழல் புகார் களில் சிக்கியவர்கள் என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜக வேட்பாளர்களில் பானு பிரதாப் சாஹி, சஷி பூஷண் மேத்தா ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் பானு பிரதாப் சாஹி மீது, ரூ.130 கோடி மதிப்பிலான மருந்து ஊழல் புகாரும், சஷி பூஷணைப் பொறுத்தவரை, அவர் தனது பள்ளி யில் பணிபுரியும் ஆசிரியரையே கொலை செய்ததாகவும் குற்றச்சாட் டுக்கள் உள்ளன. பாஜக-வைச் சேர்ந்த மதுகோடா வின் ஆட்சியில், 2008-ஆம் ஆண்டு பானு பிரதாப் சாஹி, சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவர் விதிகளை மீறி, தனியார் நிறுவனங்களிடமிருந்து 130 கோடி ரூபாய் மதிப்பிலான மருந் துகளை கொள்முதல் செய்தார். இதில் மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டு, கடந்த 2011-ஆம் ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை யில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
அதேபோல தனது பள்ளியின் ஆசி ரியரையே கொலை செய்ததாக குற் றம் சாட்டப்பட்டவர் சஷி பூஷண். இவர் அக்டோபர் மாதம்தான் பாஜக-வில் சேர்ந்தார். இந்த இவருக்கும் தற்போது பாஜக சீட் வழங்கியுள்ளது. அதிலும் சாஹியின் பெயர், பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டி யலிலிலேயே இடம்பெற்றுள்ளது. இதற்கு பாஜக-வுக்கு உள்ளேயே எதிர்ப்பும் எழுந்துள்ளது. குறிப்பாக, பானு பிரதாப் சாஹி, சஷி பூஷண் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவந்த்பூர் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ- வான அனந்த் பிரதாப் தேவ், பாஜக விலிருந்து விலகி, ஜார்க்கண்ட் மாண வர் சங்கத்தில் இணைந்துள்ளார். ஒழுக்கத்தைப் பற்றி வாய்கிழியப் பேசிக்கொண்டிருந்த பாஜக, தற் போது குற்றவாளிகளையே, தேடிப் பிடித்து சீட் வழங்கிக் கொண்டிருப்ப தாகவும் அனந்த் பிரதாப் தேவ் விமர் சித்துள்ளார்.