பாஜக எம்.பி. இல.கணேசன்:- தூத்துக்குடி மக்கள் விவரமானவர்கள்.
ச.சா - அது தெரிஞ்சுமா உங்க மாநிலத்தலைவர நிக்க வெச்சுருக்கீங்க..??
பாமக வேட்பாளர் அன்புமணி :- எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் போன் செய்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக செய்து கொடுப்பார்.
ச.சா - 24 ஊழல் குற்றச்சாட்டயும் போன் போட்டு அவர் கிட்ட சொல்லிருக்கலாமே..?
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் கரு.நாகராஜன்:- மக்கள் மனதில் மோடி இடம்பிடித்துள்ளார்.
ச.சா - ஆமா.. இப்படி ஒரு மோசமான பிரதமரப் பார்த்ததில்லைனு..!!