டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு
சென்னை, பிப். 7- டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் நீதி மன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப் பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாட்கள் காவ லில் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 23 ஆவது மாஜிஸ்தி ரேட் கவுதமன் முன்பு சரணடைந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக் குமாரை நீதி மன்றக் காவலில் ஒருநாள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், பின்னர் பலத்த பாதுகாப்புடன் வெள்ளியன்று(பிப்.7) எழும்பூர் நீதி மன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி நாக ராஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டி யிருப்பதால் 10 நாள்கள் அவரை காவலில் அனு மதிக்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஜெயக்குமார் தாம் எந்த தவ றும் செய்யவில்லை என்றும், போலீஸ் காவலில் தன்னை அனுப்ப வேண்டாம் என்றும் நீதிபதியிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை நீதிபதி பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். பின்னர் வழக்கு மீது பிற்பகலில் மீண்டும் விசாரணை நடத்திய நீதிபதி, ஜெயக்குமாரை 7 நாட் கள் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தர விட்டார்.