கடலூர், நசவ.4- கடலூரில் வீடுகளுக்கே சென்று தீக்கதிர் ஆண்டு சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். கடலூர் நகரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தீக்கதிர் ஆண்டு சந்தா சேகரிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது 30 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன.