tamilnadu

img

திரையரங்கு கேளிக்கை வரியில் சுமூகத் தீர்வு: அமைச்சர்

தூத்துக்குடி,டிச.25-  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்  செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:   பெரிய நடிகர்கள் படம் நஷ்டம் அடைந்தால், அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள்  தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் விவ காரத்தில் அரசால் தலை யிட முடியாது.  பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கு அரசு  ஏற்பாடு செய்யும்.திரை யரங்குகளுக்கான கேளிக்கை வரி விவகா ரத்தில் சுமூகத்தீர்வு எடுக்கப் படும் என்று தெரிவித்தார்.