tamilnadu

img

மலையாள திரைப்பட இயக்குனர் சச்சி காலமானார்...

திருச்சூர் 
மலையாள திரைப்பட உலகில் சச்சி என அனைவராலும் அழைக்கப்படுபவர்  கே.ஆர்.சச்சிதானந்தம் (48). இவர் எழுத்தாளர், கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் என்பதால் மலையாள திரையுலகில் தனியொரு வழியில் பயணிக்கும் பெருமையுடையவர்.

சமீபத்தில் இவர் இயற்றிய "அய்யப்பனும் கோஷியும்" என்ற படம் மெகா ஹிட் அடித்தது. கொரோனா பரவல் காரணமாக அடுத்த படம் எடுப்பது தொடர்பாக முடிவு செய்யாமல் ஓய்வில் இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சூரில் உள்ள மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். எனினும் உடல் நிலை நாளுக்குநாள் மோசமடைந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை. 

இந்நிலையில் நேற்று சச்சி காலமானார். படங்களை இயக்குவதை காட்டிலும் கதை எழுதுவதிலேயே அதிக ஆர்வம் உள்ள கே.ஆர்.சச்சிதானந்தத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.