இளையராஜாவின் அனுமதிபெறாமல் அவரது பாடல்களை மேடைகளில் பாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தற்போதைய சூழல் இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒரு சிலர் வருவாய் ஈட்டி வருவதாக இளைய ராஜா குற்றம் சாட்டி வருகிறார் .
இந்நிலையில், தனது பாடலை அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை விதிக்க வேண்டும் என்று இளையராஜா நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ‘இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் அனுமதி பெற்ற பின்னரே அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.