tamilnadu

img

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது அறிவிப்பு

திருவனந்தபுரம்;
இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவ ராசனம் விருது வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மதநல்லிணக்கம்,தேசிய ஒரு மைப்பாட்டு க்காக ஆண்டுதோறும் கேரள அரசு ஹரிவ ராசனம் விருது வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான இந்த விருதை  இசை யமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 15 அன்று சபரிமலையில் நடைபெறும் விழாவில் ஹரிவராசனம் விருது மற்றும் வணக்கத்திற்குரிய இசைஞானி என்ற பட்டமும் கேரள அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருதும் வணக்கத்திற்குரிய இசைஞானி என்ற பட்டமும் கேரள அரசின் சார்பில் வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியு ம் பெருமிதமும் அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தின் மகத்தான இசைக்கலைஞரும், இந்தியாவின் மாபெரும் இசைப் புதல்வருமான இளையராஜாவுக்கு விருது வழங்கும் கேரள அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.