tamilnadu

img

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

குண்டூர்,ஜூலை 27-  சையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம்  கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி யுள்ளது. இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து நான்கு டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார். இந்த நிலையில், ஐந்தா வது டாக்டர் பட்டத்தை, குண்டூரில் உள்ள விக்னான் என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல் கலைக்கழகம் இளைய ராஜாவுக்கு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.  அந்தப் பல்கலைக்கழ கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  பல்கலைக்கழக மாண வர்களுடன் இளையராஜா கலந்துரையாடினார்.